logo

E   |   සි   |  

2026 ஆகஸ்ட் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதி – இலங்கை பாராளுமன்றத்தின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது கூட்டத்தொடர்கள் தொடர்பான தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்    119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத்  - இரண்டு மனுக்கள் 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் பேரழிவின் இழப்பீட்டுத் தொகை மற்றும் ஏனைய விபரங்கள்

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
மின் உற்பத்தி, மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் பிற விபரங்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 118 - நிகழ்ச்சித்திட்டம் 02 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) 

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 செப்டம்பர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks