E   |   සි   |  

2026 ஆகஸ்ட் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─ 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXXI (31) ஆம் பகுதியையும்; மற்றும்
•    2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் II (2) ஆம் பகுதி

(ii)    2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டு, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு மதிப்பீடு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு  நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின்  ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(v)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 202 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மே 19 ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi)   (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 141, 143, 144, 157அ, 168 மற்றும் 190 ஆம் பிரிவுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 யூன் 17 ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(viii)   அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஆயுள்வேத துறை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)   2016/2017 மற்றும் 2017/2018 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கடதாசிக் கம்பனியின் ஆண்டறிக்கைகள்
(x)    2023/2024 ஆம் ஆண்டுக்கான பிசீசீ லங்கா லிமிடட்டின் ஆண்டறிக்கை
(xi)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(xii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xiii)        2024/2025 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் வருடாந்த அறிக்கை
(xiv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தென் மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv)        அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வடக்கு மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvii)    2025 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை
(xviii)    2025 ஆம் ஆண்டுக்கான உயர்நீதிமன்ற பதிவகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xix)    2025 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xx)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள இரண்டு நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இரண்டு நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxiii)    2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத் தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ ரணசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) லக்மாலி ஹேமசந்திர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார - இரண்டு மனுக்கள் 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்த முன்மொழிவு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு

கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புகளிலுள்ள சிக்கல்கள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
விவசாயிகளின் போராட்டம் மற்றும் நெற் செய்கையிலுள்ள இதர பிரச்சினைகள் தொடர்பாக 2026.06.23 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கானது
(ii)    நீதித்துறை (திருத்தம்) - 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன் (ii) ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்  
(ii)    இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சுதேச மருத்துவப் பட்டதாரிகளை நியமிப்பதன் அவசியம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1820 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 19ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks