logo

பார்க்க

02

E   |   සි   |  

2026 ஆகஸ்ட் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2024 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஆண்டறிக்கை
(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    2025 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஊவா மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கிழக்கு மாகாண சபை மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2025 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2025 ஆம் ஆண்டுக்கான இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி (திருமதி) நிலந்தி கொட்டஹச்சி                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜனக சேனாரத்ன
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன தென்னகோன்
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்
இலங்கையில் செயற்படும் காதி நீதிமன்றங்கள் குறித்த விபரங்கள்

(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
செயற்படாத மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களால் அரசுக்குச் சொந்தமான வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
நெல் விலை நிர்ணயம், அரிசி இறக்குமதி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த அரசின் கொள்கை தொடர்பாக 2026.07.07 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) 

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை
“அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக இணையவழிக் குற்றங்களுடன் இணைந்த மோசடி குறித்த அரசாங்க நிதிக் குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1807 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks