E   |   සි   |  

2026 ஏப்ரல் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2023 ஆம் ஆண்டுக்கான கூட்டாட்சி முகாமைத்துவ அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i)    போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்ஹ                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம்                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
அஸ்வெசுமவின் விபரங்கள்

கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ எம். ஏ. எம். தாஹிர்
புத்தளம் முந்தலமவில் உள்ள மஸ்ஜிதுக்கு காணி அன்பளிப்பு

கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க  
மத்திய வங்கி தொடர்பாக தன்னால் கேட்கப்பட்ட பல வினாக்களுக்கு பதில் கிடைக்கப்பெறாமை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 83 ஆம் இலக்க விடயம்)

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 49; எதிராக 153) பின்னர் தோற்கடிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1812 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks