02

E   |   සි   |  

2026 மார்ச் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : இணைந்த  விசேட பொதுக் கூட்டம்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் 
3 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLV (45) மற்றும் XLVI (46) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXX (30) ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் பிரிவு 3 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 4ஊ இன் கீழ் தகுதிபெறுவதற்கான அளவுகோல்களையும், வரி விலக்களிப்புகள் அல்லது வரிச் சலுகைகள் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2026 பெப்புருவரி 08 ஆம் திகதிய 2474/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன  - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ  - இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
நாட்டில் வறுமைக்கான வரையறை, புள்ளிவிபரங்கள், கொள்கை போன்றவை.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் போன்றவற்றின் விபரங்கள்

கௌரவ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை
“உலகின் தற்போது நிலவும் நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1756 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks