01

E   |   සි   |  

2026 மார்ச் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXXVII (37), XXXVIII (38), XXXIX (39), XL (40) மற்றும் XLI (41) ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காம் தொகுதியின் XXI (21), XXII (22), XXIII (23) மற்றும் XXIV (24)  ஆம் பகுதிகள்
(ii)    பாராளுமன்ற தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண் அலுவலருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வெளிப்புற விசாரணை நடத்துவது என 2025.07.25 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவின் முடிவின்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி சுஜாதா அழகப்பெரும அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஏற்ப, 2025 நவம்பர் 24 ஆம் திகதி தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை 2026.02.19 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் அதனை நான் சமர்ப்பிக்கின்றேன். 


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii)    2019/2020 மற்றும் 2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கல்ஓயா பெருந்தோட்ட தனியார் கம்பனியின் வருடாந்த அறிக்கைகள்
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே                   
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி                   
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே     
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடாவத்த
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
இஸ்ரேல் மற்றும் ஈரான் போரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் இலக்குக்குக் குறைவான பணவீக்கம், பணவியல் கொள்கை தளர்வு மற்றும் பொறுப்புக்கூறலைப் பேணுதல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ஹெட்டிஆரச்சி  


அதனையடுத்து, 1804 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 05ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks