பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியின் வருடாந்த அறிக்கை
(iii) 1996 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க மற்றும் 2024 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் (திருத்தம்) சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் 17(10) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71(1) ஆம் பிரிவின் கீழ் தொலைத்தொடர்புகள் உட்கட்டமைப்பு வசதிகளை பகிர்ந்து கொள்ளும் ஒழுங்குவிதிகள் தொடர்பில் அப்போதைய தொழில்நுட்ப அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2024 ஓகத்து 07 ஆம் திகதிய 2396/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 2023/2024 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(v) 2023 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) கிருஷ்ணன் கலைச்செல்வி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
சட்டமா அதிபர் பதவியில் காணப்படும் சிக்கல்கள்
கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களில் நிலவும் வாகனங்கள் தொடர்பான சிக்கல்கள் பற்றி 2025.09.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.
(ii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழான தீர்மானம்
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய
அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2026 பெப்ரவரி 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks