பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த நிதிக் கூற்றுக்கள்
(ii) 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிட்டட்டின் வருடாந்த அறிக்கைகள்
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கடற்றொழில் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் ஐந்து அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்த்திருத்தத்திலுள்ள சிக்கல்கள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) 2025 வரவு செலவுத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பெறப்பட்ட முடிவுகள் போன்றன மற்றும் பணவீக்க இலக்கை 2% க்கு பதிலாக 5% ஆக நிர்ணயம் செய்ய அரச மற்றும் மத்திய வங்கியின் முடிவு தொடர்பாக 2025.10.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் முறையே கௌரவ சஜித் பிரேதமதாச மற்றும் கௌரவ ரவி கருணாநாயக்க ஆகியோரினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர், கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii) பாலர் பாடசாலைகளுக்கான விதிமுறைகள், ஆசிரியர் கொடுப்பனவுகள், வசதிகள் போன்றவை தொடர்பாக 2025.11.25 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர், கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்கள்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சிறுவர் விருத்தி மற்றும் பாதுகாப்பு மையங்களை நிறுவுதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சமன்மலீ குணசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks