பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கெளரவ நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் நான்கு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமனுக்கள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமிணி ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத் - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு தொடர்பாக 2025.09.10 அன்று பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளின் கீழ் கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) உயர்தொழிலர் நியமனங்களைப் பேணுவதற்கும் நிறுவகத்தின் உறுப்பினர்களின் ஒழுக்காற்றுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகத்தை தாபிப்பதற்கும்; நிலையான சொத்து உயர்தொழில் தொடர்பிலான பொதுமக்களின் அக்கறையை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும்; மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம அவர்களுக்கு “இலங்கை விவசாய நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட இருபதாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026), 157 பெரும்பான்மை வாக்குகளால் (ஆதரவாக 158; எதிராக 01) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 25 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம்
(v) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vi) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vii) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(viii) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(ix) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(x) துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(xi) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(xii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள்
(xiii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(xiv) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(xv) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(xvi) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(xvii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(xviii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 243 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xix) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 249 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xx) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 240 - நிகழ்ச்சித்திட்டம் 02
(xxi) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(xxii) தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2023)
(xxiii) இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxiv) இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xxv) களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை லிமிரெட்டின் வருடாந்த அறிக்கை (2022/2023)
அதனையடுத்து, 2015 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks