E   |   සි   |  

2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ்                   
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே - இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக  - இரண்டு மனுக்கள் 
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத் துறை மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்களை இயற்றுதல் மற்றும் செயல்படுத்துதல்

(ii) கௌரவ ரவி கருணாநாயக்க

எளிமைப்படுத்தப்பட்ட சேர்பெறுமதி வரியை ஒழித்தல் மற்றும் அது ஏற்றுமதி சமூகத்தில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்புகளின் விபரங்கள் தொடர்பாக 2025.09.12 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் போது கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டதுடன் (i) ஆம் இலக்க விடயம் விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது. (ii) ஆம் இலக்க விடயம் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது:-

(i)    தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) தீப்தி வாசலகே


அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டம்பர் 25ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks