பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டம்
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VIII ஆம் மற்றும் IX ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காவது தொகுதியின் III ஆம் மற்றும் IV ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் IV ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 24(4) ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு என்பவற்றின் பிரகாரம் 2025 சனவரி 01 ஆந் திகதி முதல் 2025 ஜூன் 30 ஆந் திகதி வரை செய்யப்பட்ட “வீரமென்ட் நடைமுறை மூலம் ஒதுக்கீடுகளை மாற்றுதல்” தொடர்பான விவரங்கள் குறித்த அறிக்கை.
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னோலொஜி (உத்தரவாதம்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் உளவியலில் சிறப்பு விஞ்ஞான இளமாணி பட்டம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2024 திசெம்பர் 16 ஆம் திகதிய 2415/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னோலொஜி (உத்தரவாதம்) லிமிட்டெட்டினால் வழங்கப்படும் நில அளவையியலில் சிறப்பு விஞ்ஞான இளமாணி, உயிரியல் மருத்துவ விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞான இளமாணி மற்றும் செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமாணி பட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 20 ஆம் திகதிய 2424/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவின் கீழ், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தினால் வழங்கப்படும் ஹோட்டல் மற்றும் விடுதி முகாமைத்துவ இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 மாச்சு 19 ஆம் திகதிய 2428/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(v) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2025 செத்தெம்பர் 21 ஆம் திகதிய 2454/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்.
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vii) 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய புத்தாக்க முகவராண்மையின் ஆண்டறிக்கைகள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினை
(ii) கௌரவ கே. காதர் மஸ்தான்
வாகன புகை சோதனை முறையில் உள்ள சிக்கல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விடைத்தாளை மீள் பரிசீலித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1749 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டம்பர் 24ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks