பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : “கம்பெனிகள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXI ஆம் பகுதியையும்;
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXVII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ரீ.கே. ஜயசுந்தர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - நான்கு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
‘அஸ்வெசும’ திட்டத்தின் விபரங்கள்
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
சுயாதீன ஆணைக்குழுக்களின் செயல்பாட்டு கட்டமைப்பு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானங்களின் செயல்திறன் மற்றும் சட்ட கட்டமைப்பு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks