பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : மே 23ஆம் திகதி நியமிக்கப்பட்ட விசேட குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களுக்கு “இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறி திறந்த நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கெளரவ வருண லியனகே அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
(ii) ரெட்ஸோ அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)
(iii) இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்க (கூட்டிணைத்தல்)
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ கோசல நுவன் ஜயவீர
(ii) மறைந்த கௌரவ மாவை சோ. சேனாதிராசா
(iii) மறைந்த கௌரவ டொனல்ட் திசாநாயக்க
(iv) மறைந்த கௌரவ ஜே.ஆர்.பி. சூரியப்பெரும
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
அதனையடுத்து, 1716 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks