E   |   සි   |  

2025 மார்ச் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - ஐந்து மனுக்கள்
(ii)    கௌரவ தனுர திசாநாயக - இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ நிஷாந்த பெரேரா                   
(iv)    கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத் - மூன்று மனுக்கள்
(v)    கௌரவ சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தீயணைப்புப் படைப் பிரிவுகளை அமைத்தல்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கும்பல் வன்முறை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1834 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 6ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks