E   |   සි   |  

2025 ஜனவரி 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 2025 - 2029 காலப்பிரிவிற்கான ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்திட்டம் (NAP) தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆலோசனை அமர்வு
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i)    மறைந்த கௌரவ குமார வெல்கம
(ii)    மறைந்த கௌரவ எச். நந்தசேன
(iii)    மறைந்த கௌரவ டியூடர் குணசேக்கர


அதனையடுத்து, 1225 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜனவரி 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks