E   |   සි   |  

2024 மே 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVI ஆம் பகுதியையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVII மற்றும் XLVIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXX மற்றும் XXXI ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான ஓஷன் வீவ் டிவலப்மன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிகள் பொருட்கள் சபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “‍களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்)” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கைகள் இரண்டினை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கைகள் மூன்றினை அக்குழுவின் தவிசாளர் ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அ. அரவிந்த் குமார்        -     இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ லலித் எல்லாவல                    
(iii)    கௌரவ எம். ராமேஷ்வரன்                    
(iv)    கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய                     
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ஹேஷா விதானகே
(ii)    கௌரவ விஜித ஹேரத்
(iii)    கௌரவ சம்பத் அதுகோரள
(iv)    கௌரவ கபில அதுகோரள


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

அபிவிருத்திக் கருத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சமூக ஆலோசனைக் குழு


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள மொழி மூலப் பாடசாலைகளின் விபரங்கள் தொடர்பாக 2024.03.06 அன்று பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளின் கீழ் கௌரவ கெவிந்து குமாரதுங்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்கள்) சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(ii)    பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ டலஸ் அழகப்பெரும
(ii)    கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய


அதனையடுத்து, 1713 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மே 09ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks