E   |   සි   |  

2024 மார்ச் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ உத்திக பிரேமரத்ன அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ எஸ். சீ. முதுகுமாரண அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படையற்ற கருத்துக்களினால் அரச அதிகாரிகளின் நற்பெயர் மற்றும் தொழில் கௌரவம் போன்றனவற்றில் பாதிப்பை ஏற்படுத்தல்
C : நில்வளா கங்கையை உள்ளிட்ட நீர் மூலங்களின் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து புதிய முன்மொழிவுத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்
E : மத்திய வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020/2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட றக்னா ஆரக்ஷக லங்காவின் வருடாந்த அறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்று அறிக்கைகளும்
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் ஆண்டறிக்கை
(vi)    2020/2021 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(viii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ix)    2022 ஆம் ஆண்டுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டேமினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(x)    2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்டக் கம்பனியின் ஆண்டறிக்கை
(xi)    2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை

(xii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44(3) ஆம் உறுப்புரை மற்றும்  2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் 8(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 24 ஆம் பிரிவின் கீழ் தொழில்நுட்ப அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 22 ஆம் திகதிய 2311/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xiii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்) தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xiv)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2024 மார்ச் 03 ஆம் திகதிய 2373/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xvi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேரத்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2023 ஏப்ரல் 03 ஆம் திகதிய 2326/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii)    1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்துப் பதிவுச் சட்டத்தின் 67 ஆம் பிரிவின் கீழ் உரித்துப் பதிவு தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 01 ஆம் திகதிய 2308/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xviii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கைத்தொழில் அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான  119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை தொடர்பான பிரச்சினைகள்

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

அரசாங்க நிறுவனங்களை (டெலிகொம் மற்றும் இதர) விற்பனை செய்தல்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) - 19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானது
(ii)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) - 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களுக்கு “புத்தஷிராவக்க பராமரிப்பு மையம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 10 வரையான) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டதுடன் 1 முதல் 7 வரையான விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் 8 முதல் 10 ஆம் இலக்க விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-

(i)    பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii)    நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii)    ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv)    நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(v)    உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vi)    கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vii)    ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(viii)    வரையறுக்கப்பட்ட சீ நோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(ix)    இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(x)    இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2020)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இயந்திர திறன் 450CC முதல் 1300CC வரை மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி வழங்கல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1702 மணியளவில் பாராளுமன்றமானது 2024 மார்ச் 06ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks