பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
B : “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : “இலங்கையின் மலையக தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தை” தாபிப்பதற்கான அங்கீகாரம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபையின் ஆண்டறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான திறன் மேம்பாட்டு நிதி லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(v) 2022 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான தலவாக்கலை இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கைகள்
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான லங்கா சதொச லிமிடட்டின் வருடாந்த அறிக்கை
(ix) 2022 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(x) வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில்நுட்ப அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பிரதமரின் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 28 ஆம் திகதிய 2360/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரைகளுடன், சுற்றுலா அபிவிருத்தி பிரதேசங்களைப் பிரகடனப்படுத்துதல் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 செப்டெம்பர் 07 ஆம் திகதிய 2348/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 53(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரைகளுடன், இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிசாரசபையின் தவிசாளரினால் விதிக்கப்பட்டு, 2023 செப்டெம்பர் 11 ஆம் திகதிய 2349/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை அனுமதித்து அச்சட்டத்தின் 53(6) ஆம் பிரிவின் கீழ் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதிய 2354/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ லலித் வர்ணகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டி.பி. ஹேரத்
(ii) கௌரவ பிரசன்ன ரணவீர
(iii) கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
(iv) கௌரவ சாரதீ துஷ்மந்த
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 10 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன. 1ஆம் இலக்க விடயம் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 8 முதல் 10 வரையான விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன.:-
(i) நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) இலங்கையில் சட்டக் கல்வியின் மீளாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான விதப்புரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்றத் விசேட குழு பற்றிய பிரேரணை
(iii) இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(iv) ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம்
(v) ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(vi) சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(vii) தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(viii) தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவ (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ix) சவீர மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(x) பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
அதனையடுத்து, 1636 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜனவரி 24ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks