பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 டிசம்பர் 20 ஆம் திகதிய 2363/26 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
“ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்”, “சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” மற்றும் “தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” ஆகியன பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கைகள் மற்றும் கூட்ட அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ டி.பி. ஹேரத்
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“சோ்பெறுமதி வரி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ கபீர் ஹஷீம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜனவரி 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks