E   |   සි   |  

2023 நவம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2023 நவம்பர் 21 ஆம் திகதி சபா மண்டபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பானது

B : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்
C : 2023 நவம்பர் 27, டிசம்பர் 02 மற்றும் 05 ஆம் திகதிகளுக்கான திருத்தப்பட்ட குழுநிலை நிகழ்ச்சிநிரல்
D : 03 புதிய ஒன்றியங்களை உருவாக்குதல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 வரைவு மதிப்பீட்டு வாசகங்களில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின் நிரல்
(ii)    2023 - 2033 தேசிய கல்விக் கொள்கை உருவரைச் சட்டகம்
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபையின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக்க பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பான கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

(i)    கௌரவ சட்டத்தரணி சந்திரம வீரக்கொடி 

தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளரின் ஊடகத்திற்கான கடிதம்

(ii) கௌரவ சஜித் பிரேமதாச 

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் தனது உரைக்கு இடையூறு விளைவித்தல்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ இரான் விக்கிரமரத்ன அவர்களுக்கு 2023 மே மாதம் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட “சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை மீளப்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையில் பிரேரிக்கப்பட்டன. 2 ஆம் இலக்கம் அங்கீகரிக்கப்பட்டதுடன் 3 முதல் 7 வரையான விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன.:-

(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிரகடனம்
(iii)    வைட் றோஸ் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(iv)    கிழக்கு மீளெழுச்சி அமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(v)    இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(vi)    சமாதி சுகாதார சேவைகள், சுற்றாடல், விவசாய, கலாசார மற்றும் விளையாட்டு நிலையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(vii)    தென்னிலங்கை மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிபீடம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“காடுகளை அகற்றுவதற்கும் பயிர்களை பயிரிடுவதற்கும் தகுந்த வழிமுறையை பின்பற்றுதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 23ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks