E   |   සි   |  

2023 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

அரசியலமைப்புப் பேரவையினால் ஆக்கப்பட்ட விதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை

(iii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 நவம்பர் 17 ஆம் திகதிய 2358/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி வலேபொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சம்பத் அதுகோரல                    
(ii)    கௌரவ எச். நந்தசேன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

அமர்வுகளின் வீடியோ பதிவு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடல் தொடர்பானது


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

பொருளாதார நெருக்கடி தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சம்பந்தமாக அரசின் நிலைப்பாடு


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 யூலை 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2024) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2024) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 122 பேரும் எதிராக 77 பேரும் வாக்களித்தனர்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1813 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 22ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks