E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 3, 4 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 145 - நிகழ்ச்சித்திட்டம் 02 (மீள் குடியமர்த்துகை, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு)
(iii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) தாவரப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"வத்தளை முதல் நீர்கொழும்பு வரையான கடற் பகுதியில் மற்றும் நீர்கொழும்பு களப்பில் மீன் பிடித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குதல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2009 டிசம்பர் 08 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks