பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் (பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இலக்கம் 182, 183 மற்றும் 184 உள்ளடக்கிய) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பாக குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(ii) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பரிந்துரைகளுடன், சுற்றுலா அபிவிருத்தி பிரதேசங்களை பிரகடனப்படுத்துதல் தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 யூலை 26 ஆம் திகதிய 2342/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடைவுகளை மீளாய்வு செய்வதற்கான திட்டம்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ நிதி இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சமிந்த விஜேசிறி
பாராளுமன்றத்தில் தனது நடத்தை தொடர்பாக தன் மீதான குற்றச்சாட்டு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பாடசாலை அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1842 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2023 நவம்பர் 15ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks