E   |   සි   |  

2023 நவம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : வரவு செலவுத் திட்ட உரை - 2024 இற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அழைப்பு தொடர்பானது


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான காலி மரபுரிமை மன்றத்தின் வருடாந்த அறிக்கை

(iii) (351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் 23 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 52 ஆம் பிரிவின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் 2023 நவம்பர் 07 ஆம் திகதி ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பிரசன்ன ரணதுங்க                    
(ii)    கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா                                
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

இலங்கை கிரிகெட்டில் காணப்படும் நெருக்கடி நிலைமை

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

உலகப் போர்ச் சூழ்நிலையால் இலங்கைப் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 2023.10.18 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர், கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 55 முதல் 58 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன. 56 மற்றும் 57 ஆகிய விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன.:-

(i)    உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்
(ii)    பாராளுமன்றத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii)    மாகாணசபைத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv)    கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு சட்டமூலம் - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வடக்கு மாகாணத்தின் நீண்டகால இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ றிஸாட் பதியுதீன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 13ஆந் திகதி திங்கட்கிழமை 1200 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks