E   |   සි   |  

2023 ஒக்டோபர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
B : அரசியலமைப்புப் பேரவை தொடர்பானது
C : கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுடனான விசேட கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(ii) 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 மே 27 ஆம் திகதிய 2281/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் 2022 செப்டெம்பர் 08 ஆம் திகதிய 2296/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii)    1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 நவம்பர் 05 ஆம் திகதிய 2304/88 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv)    1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 14 ஆம் திகதிய 2310/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v)    1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 18 மற்றும் 19 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 14 ஆம் திகதிய 2310/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் மயந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ றோஹண திஸாநாயக்க      -  இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    தேசிய நீரளவை - 1974 ஆம் ஆண்டின் கடலில் உயிர்காப்புக்கான சர்வதேச சமவாயத்தின்கீழான இலங்கையின் குறித்தசில குறிப்பிட்ட கடப்பாடுகளுக்குப் பயன்கொடுப்பதற்காகவும்; தேசிய நீரளவைசார் அலுவலகத்தைத் தாபிப்பதற்காகவும்; நீரளவைசார் அளவையாளர்களையும் கப்பல்துறைசார்ந்த நிலப்படவியலர்களையும் பதிவுசெய்வதற்காகவும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்கானது
(ii)    ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) - 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    கம்பெனிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான பிரகடனம்


ஒத்திவைப்புப் பிரேரணை

“சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவதால், உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்கவும், அமைதியான தீர்வுக்கு உடனடியாக தலையிடவும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்க ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ உதய கம்மன்பில அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1650 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks