E   |   සි   |  

2023 செப்டெம்பர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் 


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பத்திரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சாந்த பண்டார
(ii)    கௌரவ வஜிர அபேவர்தன           -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ அசங்க நவரத்ன அவர்களுக்கு “சுசரண லங்கா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்கள் பாராளுமன்றக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஒக்டோபர் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks