பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூத்திற்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாயசபையின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 செப்டெம்பர் 17 ஆம் திகதிய 2349/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பலபிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ புத்திக பத்திறண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக்க பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ நலின் பிரனாந்து
(ii) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
மதுபான உரிமங்கள், பியர் அனுமதிப் பத்திரம் மற்றும் கன்சா பயிர்ச்செய்கை
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii) காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அரசதுறையினரால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைநிறுத்த நடவடிக்கையினால் அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1648 மணியளவில் பாராளுமன்றமானது 2023 செப்டெம்பர் 21ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks