E   |   සි   |  

2023 செப்டெம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “உண்ணாட்டரசிறை (திருத்தச்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு  
B : பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்
D : கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்     
E : கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்     
F : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடலோர காவல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கல்வி, மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலனோம்பல் நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை

(viii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவினதும் இயைபான ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளினதும் கலந்தாலோசனையுடன், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 02 ஆம் திகதிய 2334/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix)    (451 ஆம் அத்தியாயமான) காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் 24(1) (ஞ),(ட) மற்றும் (ண) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 64(2)(ஊ) ஆம் பிரிவு, 23அ, 23ஆ, 23இ, 23ஈ மற்றும் 28(3) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 64(1) ஆம் பிரிவு, 24(1) ஆம் பிரிவு, 3அ ஆம் பிரிவின் (3), (4), (5) மற்றும் 6 ஆம் மற்றும் 64 ஆம் பிரிவுகள், 3(4) ஆம் பிரிவு மற்றும் 64 ஆம் பிரிவு மற்றும் 58 ஆம் மற்றும் 59 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 64 ஆம் பிரிவின் கீழ், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு,  2023 ஆகஸ்ட் 21 ஆம் திகதிய 2346/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x)    1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் 45(1அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 61 ஆம் பிரிவின் கீழ், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு,  2023 யூலை 04 ஆம் திகதிய 2339/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi)    1995 ஆம் ஆண்டுக்கான 35 ஆம் இலக்க, அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் 4(1)(ஊ) ஆம் பிரிவின் கீழ், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 26 ஆம் திகதிய 2294/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி                    
(ii)    கௌரவ எச். நந்தசேன            -   இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

க.பொ.த. (உ/த) பரீட்சையை நடாத்துதல்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, இலங்கைத் துறைமுக அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சஞ்ஜீவ எதிரிமான்ன அவர்களுக்கு “வல்பொல பியனந்த கல்வி கலாசார மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்கள்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. 4 ஆம் இலக்க விடயம் சபையினால் மீளப் பெறப்பட்டது.:-

(i)    ஆயுள்வேதம் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii)    சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv)    சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தண்டனைகளை அனுபவித்த சிறார்களும் இளைஞர்களும் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிரமங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) மஞ்சுளா திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1826 மணியளவில் பாராளுமன்றமானது 2023 செப்டெம்பர் 06ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks