E   |   සි   |  

2023 ஆகஸ்ட் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற உறுப்பினர்களினால் செயலாளர் குழாம் மற்றும் பணியாளர்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான  இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான  வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஆண்டறிக்கைகள்
(iii)    2020/2021 ஆம் ஆண்டுக்கான  களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ விமல் வீரவங்சஅவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ புத்தி பத்திறண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க                    
(ii)    கௌரவ ஜயரத்ன ஹேரத்                    
(iii)    கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே                    
(iv)    கௌரவ துஷார இந்துனில் அமரசேன                    
(v)    கௌரவ காமினி வலேபொட                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ அநுர திசாநாயக்க

இலங்கை சட்டக் கல்லூரியினால் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணம் தொடர்பானது

(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் இடங்கள் தொடர்பான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ்  தீர்மானம் (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் விடயமாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“இலங்கை கிரிகெட்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஹேஷா விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1944 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஆகஸ்ட் 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks