E   |   සි   |  

2023 ஆகஸ்ட் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
C : இணைந்த விசேட பொதுக் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(v)    2015 ஆம் ஆண்டுக்கான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை

(viii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 ஆகஸ்ட் 17 ஆம் திகதிய 2345/57 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(ix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை, றுகுணு, ரஜரட்ட, யாழ்ப்பாணம், களனி, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகங்களில் தகவல் தொழில்நுட்பவியல் துறைப் பிரிவொன்றை தகவல் தொழில்நுட்பவியல் துறைப் பிரிவுகளை  நிறுவுதல் தொடர்பாக கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2022 ஏப்ரல் 06 ஆம் திகதிய 2274/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(x)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறைப் பிரிவொன்றை நிறுவுதல் தொடர்பாக கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 யூலை 26 ஆம் திகதிய 2290/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகள் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைப் பிரிவொன்றை நிறுவுதல் தொடர்பாக கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய 2293/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிநுட்பவியல் துறைப் பிரிவொன்றை நிறுவுதல் மற்றும் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்தில் முழுமையான வாய்சுகாதார கவனிப்புத் துறைப் பிரிவொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி, அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2022 ஆகஸ்ட் 25 ஆம் திகதிய 2294/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க        -  இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

சுகாதாரத் துறையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii)    கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் வினாவொன்று கேட்கப்பட்டது:-

கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சீ. தொலவத்த 


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஆகஸ்ட் 24ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks