E   |   සි   |  

2023 ஜூலை 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த  அறிக்கை.
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    முதலீட்டு மேம்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ யதாமிணீ குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை 1 அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை 2 அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சிறிபால கமலத்                  -     மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல    -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கோதுமை மா இறக்குமதிக்கு தடை தொடர்பாக 2023.07.19 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பதிலளித்தார்.


தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ பாட்டளி சம்பிக்க ரணவக்க

அரசாங்க நிதிக் குழுவில் தனது பங்குபற்றல் தொடர்பாக ‘மவ்ரட’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“ஒதுக்கீடு (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 ஜூன் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் - திருத்தங்களுடன் - இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 66; எதிராக 24)
(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பதில் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவையின் சம்பள முரண்பாடுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ குமாரசிறி ரத்னாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1813 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks