பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
B : கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட திறன்கள் விருத்தி நிதியத்தின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த நிதிக் கூற்றுக்கள்
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(vi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 யூலை 17 ஆம் திகதிய 2341/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
கோதுமை மா இறக்குமதிக்கு தடை
(iii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், நாட்டில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உணவு நெருக்கடி
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
புதிய களனி பாலம் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்து மரைகள், மர ஆணிகள், GI குழாய்கள் போன்றவற்றை அகற்றுதல் தொடர்பாக கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன
தனது மகன் குறித்து சமூக வலைதளங்களிலும், வலைதளங்களிலும் தவறான செய்திகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டதுடன் 3 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது:-
(i) ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன்
(ii) கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன
அதனையடுத்து, 1351 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 20ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks