E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ அனந்த லக்ஷ்மன் விஜேமான்ன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தம்)

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


பாராளுமன்றக் கட்டிடடத் தொகுதியின் தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2010 பெப்புருவரி மாதம் 28ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்ற சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


கெளரவ (திருமதி) நிரூபமா ராஜபக்ஷ் அவர்களுக்கு "போதிராஜாராம கல்வி மற்றும் கலாசார மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009 ஆகஸ்ட் 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு கெளரவ பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 64 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 71 வாக்குகளும் அதற்கு எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஆகஸ்ட் 18 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks