E   |   සි   |  

2023 ஜூலை 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த ஆண்டறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மன்றத்தின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான உயர் நீதிமன்றப் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(vi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 09 ஆம் திகதிய 2335/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(vii)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்க பொதுவான மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான தீர்வைக் கட்டண அறவீடு தொடர்பில்  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 மே 31 ஆம் திகதிய 2334/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சம்பத் அதுகோரலஅவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v)    ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லலித் வர்ணகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ விமலவீர திசாநாயக்க                    
(ii)    கௌரவ உதயன கிரிந்திகொட                    
(iii)    கௌரவ வீரசுமன வீரசிங்ஹ                    
(iv)    கௌரவ சமன்பிரிய ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    உரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நெல் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பாக 2023.06.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.
(ii)    மின் மற்றும் வலுசக்தி துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக 2023.07.05 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (வண.) ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க ) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii)    குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
(ii)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks