பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட திறன்கள் விருத்தி நிதியத்தின் ஆண்டறிக்கைகள்
(ii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமான 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு காரணமாக பங்குச் சந்தை, ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பு
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக் கைமுறைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காக
“குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் (Ease of Doing Business Index) பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2022 ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லையானது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2023 நவம்பர் 22 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யபடுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மூழ்கிய ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1733 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மே 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks