E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம் கரையோரக் காவல் திணைக்களம் கரையோரக் காவல் திணைக்களமொன்றைத் தாபிப்பதற்கும், கரையோரக் காவல் திணைக்களத்தின் பணிகளைக் குறித்துரைப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார். கெளரவ லலித் திஸாநாயக்க அவர்களுக்கு "ரோஹித அபேகுணவர்தன மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'HNDE கற்கைநெறியை பொருத்தமான நிருவாக அமைப்பின் கீழ் கொண்டு வருதல்'எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எஸ்.ஏ. ஜயந்த சமரவீர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1620 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுன் 25 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks