E   |   සි   |  

2023 மார்ச் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும்  நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான தொலைக் கல்வி நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சதொசவின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மீதான கட்டுப்பாடுகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“உண்ணாட்டரசிறை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2023.03.22 அன்று முன்வைத்த கூற்று” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஏப்ரல் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks