E   |   සි   |  

2023 மார்ச் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : “இந்திரா புற்றுநோய் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய    -     மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

புகையிலை மற்றும் மதுபானம் மீது விதிக்கப்பட்ட வரி தொடர்பாக கூற்றொன்றினை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1977 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, தேசிய அரசுப் பேரவையின் பிரிவிடற் சட்டத்தைத் திருத்துவதற்காக

“பிரிவிடல் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (திருமதி) கோகிலா குணவர்தன அவர்களுக்கு “இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன:-

(i)    இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை (2020)
(iv)    கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2017/2018)
(v)    கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2018/2019)
(vi)    இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vii)    ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்புப் பிரேரணை

“சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2023.03.22 அன்று முன்வைத்த கூற்று” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மார்ச் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks