பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
B : பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் நியமனம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iii) 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆண்டறிக்கைகள்
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை திரிபோஷ கம்பனியின் ஆண்டறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு இயக்கச் சபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 மார்ச் 13 ஆம் திகதிய 2323/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 மார்ச் 17 ஆம் திகதிய 2323/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xii) 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக் கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7(2) ஆம் பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 சனவரி 30 ஆம் திகதிய 2317/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு பதிலாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ அநுராத ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நலின் பிரனாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மற்றும் பல விடயங்கள்
கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
2021 மார்ச் 26 ஆம் திகதி கௌரவ சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2021 மார்ச் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட காலப்பகுதியில் பாராளுமன்றத்திற்கு இடைக்கால அறிக்கை ஒன்றின் மூலம் சமர்ப்பித்துள்ளதுடன் தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை மேலும் ஆராய்ந்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலம் தேவைப்படுவதால் விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லையானது 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 ஏப்ரல் 05 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டன. 1 ஆம் இலக்க விடயம் அங்கீகரிக்கப்படவில்லை; 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள் - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 01; எதிராக 113)
(ii) பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல் பற்றிய தீர்மானம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2023 மார்ச் 09) - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 75; எதிராக 43)
(iii) பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“விளையாட்டு சங்கங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எம்.டப்ளியூ. சஹன் பிரதீப் விதான அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மார்ச் 22ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks