E   |   සි   |  

2023 மார்ச் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(ii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கம்பஹா மாவட்ட செலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.01.01 முதல் 2023.01.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே                    
(ii)    கௌரவ புத்திக பத்திறண                    -     மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 மார்ச் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“சர்வஜன வாக்குரிமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 மார்ச் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks