E   |   සි   |  

2023 பெப்ரவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D : சபைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
H : பின்வரிசைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
(iii)    2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான  தேசிய விஞ்ஞான  மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(v)    2021 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுகத்தின் ஆண்டறிக்கை
(vi)    2021 ஆம் ஆண்டுக்கான குற்றத்தால் பலியானவர்களையும் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்புதற்கான தேசிய அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிகள் சபையின் ஆண்டறிக்கை
(viii)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான தலவாக்கலை இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை
(x)    2018/2019 ஆம் ஆண்டுக்கான  கல்ஓயா பெருந்தோட்ட தனியார் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை

(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, றுகுணு பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொறியியல் மற்றும் கப்பல் கட்டுமானவியல் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 13 ஆம் திகதிய 2310/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் விநியோகப் பொறியியல் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 19 ஆம் திகதிய 2311/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான      119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி                    
(ii)    கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன
(iii)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

நுவரெலியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ ஜகத் சமரவிக்கிரம
(ii)    கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி


அதனையடுத்து, 1711 மணியளவில் பாராளுமன்றமானது 2023 பெப்ரவரி 23ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks