பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
C : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVII ஆம் பகுதியையும் ;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXII, XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXIV, XXV, XXVI மற்றும் XXVII ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XVII, XVIII, XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும், ஐந்தாம் தொகுதியின் I, II, III மற்றும் IV ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாம் தொகுதியின் XVIII, XIX, XX, XXI, XXII, XXIII, XXIV மற்றும் XXV ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபையின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பற்றிய உயர்கல்வி தொடர்பான தேசிய நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(ix) 2021 ஆம் ஆண்டுக்கான நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(x) 2018 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xi) 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா திரிபோஷ கம்பனியின் வருடாந்த அறிக்கைகள்
(xii) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2018 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றும்.
(xiv) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வருடாந்த அறிக்கைகளும் நிதிக்கூற்றுகளும்
(xv) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கைகள்
(xvi) 2021 ஆம் ஆண்டுக்கான தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvii) 2021 ஆம் ஆண்டுக்கான மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை
(xix) 2020/2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(xx) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(xxi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 09 ஆம் திகதிய 2309/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 19 ஆம் திகதிய 2311/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 21 ஆம் திகதிய 2311/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiv) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19 (அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 டிசம்பர் 08 ஆம் திகதிய 2309/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தொடர்பான சிக்கல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆம் விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் (விடய இலக்கம் 4 மற்றும் 5) சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல.126)
(iv) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல.160)
அதனையடுத்து, 1640 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜனவரி 18ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks