E   |   සි   |  

2022 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் எனக்கு சமர்ப்பிக்கப்பட்ட  தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித்திட்டத்தை அச்சட்டத்தின் 35(3) ஆம் பிரிவு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ சமிந்த விஜேசிறி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தொடர்பான பிரச்சனைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 34 மற்றும் 35 ஆம் விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-
(i)    சோ்பெறுமதி வரி (திருத்தம்) - மூன்றாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு (ஆதரவாக 82; எதிராக 41)
(ii)    உண்ணாட்டரசிறை (திருத்தம்) - மூன்றாம் மதிப்பீடு மீது வாக்கெடுப்பு (ஆதரவாக 79; எதிராக 36)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜயந்த சமரவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1829 மணியளவில் பாராளுமன்றமானது 2022 டிசம்பர் 13ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks