E   |   සි   |  

2022 டிசம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம்      
B : வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
C : அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்      
D : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2022 டிசம்பர் 03 ஆம் திகதிய 2308/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நலின் பிரனாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா  - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ வஜிர அபேவர்தன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

கஞ்சா பயிர்ச்செய்கை

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 2022 டிசெம்பர் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i) வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 நவம்பர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல் 2022 டிசெம்பர் 05 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக

(ii) பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 123  இன்  ஏற்பாடுகள் மற்றும்  2022 நவம்பர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல் 2022 டிசெம்பர் 05 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு  (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக

(iii) வழிவகைகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன்  ஏற்பாடுகள் மற்றும்  2022 நவம்பர் 26 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல் 2022 டிசெம்பர் 05 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் சேவையாற்றுவதற்காக வழிவகைகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2023) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்


அதனையடுத்து, 1921 மணியளவில் பாராளுமன்றமானது 2022 டிசம்பர் 08ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2023]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks