சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:
- உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கான.
- சேர்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான.
- பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கான.
- நிதி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும் 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும் திருத்துவதற்கான.
- நிதி (திருத்தம்) - 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு
- பற்றுக்கள் வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பற்றுக்கள் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான.
- உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) - 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கான.
2007 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்க, உள்ளூரதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கான பின்வரும் சட்டமூலத்தை கெளரவ உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பிரேரித்தார்.
உள்ளூரதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் (1) ஆம் மற்றும் (2) ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.
(i) காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள்
(ii) கமநல அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
'நிதிக் கம்பனிகளில் முதலீடு செய்தோர்களுக்கான நிவாரணம்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1605 மணியளவில் பாராளுமன்றமானது 2009 மார்ச் 18 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.