பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க திருத்தப்பட்டவாறான சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2அ பிரிவின் கீழ், பெறுமதி சேர் வரி தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2300/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 22 ஆம் திகதிய 2294/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 05 ஆம் திகதிய 2300/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மனுஷ நாணாயக்கார
(ii) கௌரவ கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ ஜயந்த கெட்டகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அங்கவீனர்களுக்கான நலனோம்புகை தொடர்பாக 2022.11.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சார்பாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“எம்பிலிப்பிட்டிய நகரிலுள்ள காணிகளுக்கான ஒழுங்கான காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹேஷா விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1733 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2022 நவம்பர் 19ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2023]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks