பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான தொல்பொருளியல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(2) ஆம் பிரிவின் கீழ் செஸ் அறவீடு தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 05 ஆம் திகதிய 2300/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 21 ஆம் திகதிய 2302/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் மற்றும் 139 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(அ) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் மற்றும் கலைப் பீடத்தினை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 16 ஆம் திகதிய 2293/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைகள் பீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறையினை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் 25 ஆம் திகதிய 2294/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய
(ii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனங்கள் பற்றிய அறிக்கை தொடர்பாக கூற்றொன்றினை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முதியோர் உதவித்தொகை போன்றவற்றை பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ஒப்படைத்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1800 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2022 நவம்பர் 18ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2023]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks