E   |   සි   |  

2022 நவம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(v)    2021 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ சந்திரகுமார விஜய குணவர்தன
(ii)    மறைந்த கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க
(iii)    மறைந்த கௌரவ க. துரைரெட்ணசிங்கம்
(iv)    மறைந்த கௌரவ (வண.) பத்தேகம சமித்த தேரர்


அதனையடுத்து, 1540 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 14ஆந் திகதி திங்கட்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks