E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம் "விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திட்ட (ஆயுதந்தாங்கிய படைகள்) (திருத்தம்)" 1970 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திட்ட (ஆயுதந்தாங்கிய படைகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் சமர்ப்பித்தார். "விதுரர்களினதும் அநாதைகளினதும் ஓய்வூதியத்திட்டம் (ஆயுதந்தாங்கிய படைகள்) (திருத்தம்)" 1998 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, விதுரர்களினதும் அநாதைகளினதும் ஓய்வூதியத்திட்டம் (ஆயுதந்தாங்கிய படைகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் சமர்ப்பித்தார். சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட விடயம் 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (i) சுற்றாடல் பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் (iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (iv) பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'விவசாயிகளுக்கான நஷ்டஈடு' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கே. வீ. சமந்த வித்தியாரத்ன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து,1542 மணியளவில் பாராளுமன்றமானது 2009 மார்ச் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks