பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
B : 2021 நவம்பர் 12ஆம் திகதி, வெள்ளிக்கிழமை தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பானது
C : பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுக்கான கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான செலவினத் தலைப்பு இல.04 - உயர் நீதிமன்ற நீதியரசர்களின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஒலிபரப்புச் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னேற்ற அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ அஜித் மான்னப்பெரும
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
அங்கவீனர்களுக்கான நலனோம்புகை
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் பகுதியளவில் பதிலளித்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன்
கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் தனக்கெதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 14 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை (திருத்தச்) சட்டமூலம்
(ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம்
(iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(v) கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தச்) சட்டமூலம்
(vi) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(vii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(viii) சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ix) அபாயகரமான விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம்
(x) சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள்
(xi) கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள்
(xii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பாடசாலை மாணவர்களை குறிவைத்துள்ள போதைப்பொருள் வியாபாரம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) மஞ்சுளா திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றமானது 2022 நவம்பர் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks